ஏற்றத்தாழ்வை நிலைநாட்டும் வேதாந்த, சித்தாந்தத்தின் ஆதிக்கம் இந்திய மக்களின் மனதை இன்றும் ஆட்சி செய்வது போல் பிளேட்டோவின் கருத்து மேலைநாட்டு மக்களை ஆட்டிப்படைக்கிறது.
உழைப்பாளி மக்களை அடக்கி ஆளாமல், பட்டினிச் சம்பளத்திற்கு வேலை வாங்காமல், பொருளாதார வளர்ச்சிக்கு இடமில்லை என்ற சுரண்டல் ஏற்பாட்டை நிலைநாட்ட பிளேட்டோ காலத்து தத்துவக்கருத்துக்களை பூர்சுவாக்கள் தூக்கிப் பிடித்தனர்.
அவரது தத்துவக் கண்ணோட்டத்தையும், அதனடிப்படையில் அவரது விளக்கங்களையும் பிளேட்டோவினுடைய கருத்துக்களின் தாக்கம் இன்றும் நீடிப்பதின் மர்மத்தையும் சுவைபட, எளிய சொற்களால் இந்த நூலில் பெரியசாமி அறிமுகம் செய்கிறார்.
புத்தகத்தின் பெயர் : பிளேட்டோ தத்துவப்பயணம்
ஆசிரியர் : ஆர். பெரியசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.60/-
பக்கம் : 128
ஏனைய செய்திகள்